Landslide occurs in Rajamala area of Idukki district. Police department have rushed to the spot in Idukki district of Kerala.
கேரளா மாநிலத்தில் கனமழை கொட்டி வருவதால் அங்கு இடுக்கி மாவட்டத்தில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறு அருகே தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்களின் 20 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் இதுவரை 8 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற தொழிலாளர்களின் கதி என்னவானது என்பது தெரியவில்லை.